எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தில் 13 மணிநேர மின்வெட்டு..!!!



யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா – மன்னார் 220 கிலோ வோட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக, வடமாகாணத்திற்கான 132கிலோ வோட் வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி 26ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here