ஜோதிடத்தில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதே வேளையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் வலிமை, வீரம், துணிச்சல், தைரியம் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த இரண்டு கிரகங்களும் நவம்பர் மாதத்தில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. அதுவும் இந்த கிரகங்களின் சேர்க்கையானது விருச்சிக ராசியில் நிகழவுள்ளது. இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்லும் வேளையில், இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருப்பார். இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் விருச்சிகத்தில் நிகழவுள்ளது.
இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வத்தில் மற்றும் சொத்துக்களில் நல்ல உயர்வு ஏற்படப்போகிறது. மேலும் சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் விருச்சிகத்தில் ஒன்றிணையும் செவ்வாய் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் சரியாக முடிவடையும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும்.
Tags:
Rasi Palan