கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (02) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Tags:
sri lanka news