இன்றைய ராசிபலன் - 04.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகள் வருகையால், சுப செலவுகள் ஏற்படும். பிரிந்த நண்பர்கள் உறவுகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். வேலையிலும் வியாபாரத்தையும் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று அடுத்தவர்களை நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லாரிடத்தில் பாவம் பாக்காதீங்க. இரக்க குணம் காட்டாதீர்கள். எந்த இடத்தில் எப்படி பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படி பேசினால் மட்டுமே உங்களுக்கான மரியாதை காப்பாற்றப்படும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரங்கள் கொடுக்கலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்தாலும் நம்மை நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் செயல்படுவார்கள். வேலையிலும் வியாபாரத்தையும் மனநிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் நிறைய தண்ணீர் குடித்து, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்தையும் முன்னுரிமை உங்களுக்கே கொடுக்கப்படும். சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்படி அமையும். வருமானம் சீராகும். பண்டிகைக்கு தயாராக சின்ன சின்ன வேலைகளை துவங்குவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேலையை பத்து முறை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. முதலீட்டில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து விடுங்கள். அதிகமாக பாவம் பார்த்தால், உங்களுக்கு பாவம் பார்க்க ஆள் இருக்காது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல்படுவீர்கள். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். நீண்ட நாள் கடன் சுமையலில் இருந்து விடுபடுவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை அடைவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். நாலு பேருக்கு உதவி செய்வீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கு.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனது பூரிப்பில் மூழ்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் காதலன், காதலியே சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாளில் பெருசாக நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் பெரியதாக எந்த டென்ஷனும் இருக்காது. டென்ஷன் இருந்தாலும் அதை நீங்க கண்டுக்க போவதில்லை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். எதைப் பற்றியும் கவலை கொள்ள மாட்டீர்கள். வேலை வியாபாரத்தில் பிரச்சனை வந்தாலும், அதை சுலபமாக சரி செய்யவீர்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு நிம்மதியாக இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையில் சுமூகமான போக்கே நிலவும். உங்கள் டார்கெட்டை நீங்க சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு வாக்குவாதம் வேண்டாம்.
Previous Post Next Post


Put your ad code here