யாழில். பிரபல பாடசாலையின் மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்த மாணவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!!!



யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்.

அந்நிலையில் , நேற்றைய தினம் மாணவி விடுதியின் கட்டடம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் குறித்த மாணவி கலந்து கொண்டு முதலிடம் பெற்றதாகவும் , அதனால் சக மாணவிகள் இந்த மாணவியை ஒதுக்கி , விலகி நடந்து கொண்டதால் , மாணவி விரக்தியில் இருந்ததாகவும் அதனால் மாணவி தனது உயிரை மாய்க்கும் முகமாகவே கட்டடத்தில் இருந்து குதித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here