காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழா..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மேற்கு ஐயனார் கோவில் ஆலய அலங்கார திருவிழாவின் ஐந்தாம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.

ஐந்தாம் திருவிழாவின் போது , காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , வசந்தமண்டப பூஜை தொடர்ந்து ஐயனார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

ஆலயத்தில் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் இடம்பெற்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி திருக்கல்யாண உற்சவமும் , மறுநாள் 20ஆம் திகதி வைரவர் மடையுடன் , அலங்கார திருவிழா நிறைவு பெறவுள்ளது.












Previous Post Next Post


Put your ad code here