இன்றைய ராசிபலன் - 13.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மார்க்கெட்டில் நீங்கள் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து வெற்றிவாகை சூடுவீர்கள். மனநிறைவை அடைவீர்கள். நிதி நிலைமை சீராகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரி தொல்லைகள் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் பண்டிகையை கொண்டாட தாராளமாக தயாராகலாம். நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைக்காத அளவுக்கு ஒரு பரிசு உங்களை தேடி வரும். அது உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும். உற்சாகமாக பண்டிகை கொண்டாட உங்களை ஊக்குவிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சாந்தமாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. எதிலும் சுயநலத்தோடு சிந்திக்க கூடாது. அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலையை மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரின் பிரச்சினையில் தலையிடக்கூடாது. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். முதலீட்டில் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் மனதில் இருந்து விலகும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க, மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம் நன்மை நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத சண்டை சச்சரவு வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலையை தவிர வேறு வேலையை பார்க்கக்கூடாது. குறிப்பாக மூன்றாவது நபர் பிரச்சினையில் தலையிடக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மனதெளிவோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. போனஸ் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். மனதெளிவோடு இந்த நாளை துவங்குவீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். லாபம் பெருகக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். பிள்ளைகளுடைய நலனில் பெற்றவர்கள் அக்கறை காட்டுவீர்கள். தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகலாம். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வருமானமும் இருக்கும். இறைவனின் பரிபூரண அருள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கு நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். டென்ஷன் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடைய சப்போர்ட் இருக்காது. கவனமாக இருக்க வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. என்ன சொல்கிறீர்களோ அதை செய்யுங்க. என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் சொன்னால் போதும்.
Previous Post Next Post


Put your ad code here