யாழில். இணைய வர்த்தகத்தில் பெரும் நஷ்டமடைந்த இளைஞன் உயிர்மாய்ப்பு..!!!


யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான்.

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியை சேர்ந்த  இளைஞனே உயிர் மாய்த்துள்ளார்.

குறித்த நபர் Cryptocurrency வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து இருந்ததாகவும் , குறித்த வர்த்தக நடவடிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டதால் மன விரக்தியில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக மரண  விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் முதலீடு செய்த பணத்தில் பெரும் தொகை பணம் கடனாக பெற்ற பணம் எனவும் , வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டமையால் கடன் பணத்தினை மீளளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக கடும் மனவுளைச்சலில் இருந்ததாகவும் அதனாலயே உயிரை மாய்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here