மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் மனதிற்கு பிடித்த நபரோடு வெளியில் செல்வீர்கள். விடுமுறை நாளை சந்தோஷமாக கொண்டாடுவீங்க. கையில் இருக்கும் பணமும் கொஞ்சம் செலவாக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் முக்கியமான வேலை வியாபாரம் இருந்தால் அதிலும் கவனம் செலுத்துங்கள். பொழுதுபோக்கில் மட்டும் ஆர்வம் காட்டாதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தி பேசினார்களோ, அவர்கள் முன்பு ஜெயித்து காட்டுவீர்கள். இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாள். எதிரிகளை வீழ்த்தக்கூடிய நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மறதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். விடுமுறை நாள் என்பதால் அலட்சியம் வேண்டாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. கோபப்படக்கூடாது ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தெரிந்தவர்கள் மூலமாக ஒரு நல்லது நடக்கப்போகிறது. தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வரலாம். எதிர்பாராத ஒரு நல்ல விஷயத்தை எண்ணி நீங்க சந்தோஷப்பட போறீங்க. கை நிறைய வருமானம் வரும். பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் துவங்குவீங்க நல்லது நடக்கும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வயதானவர்கள் பேரப்பிள்ளைகளோடு நேரத்தை செலவழித்து என்ஜாய் பண்ணுவீங்க. உடல் ஆரோக்கியத்தில் இருந்து விடுபடுவீர்கள். இளைஞர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை என்று அமைதியா இருப்பீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உங்களை தேடி நிறைய நல்ல வாய்ப்புகள் வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சொல்லும் அளவுக்கு பெரிசாக பிரச்சனைகள் வராது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்துவிட்டு உங்கள் நாளை துவங்க வேண்டும். அனாவசியமாக வம்பு வழக்குகளுக்கு போகாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது பாட்னரை சேர்த்துக் கொள்ளலாம். நினைத்த விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிறைவு பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் நிறைய வரும். வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பொறுமையாக செயல்பட வேண்டிய நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தெளிவாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். யார் வந்து என்ன சொன்னாலும் குழம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் சில பேர் வந்து உங்களை பிரச்சனைக்கு அழைப்பார்கள். உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் உறவுகளிடம் கவனமா இருந்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சாதனை படிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நன்மையாக நடக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்து உங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சந்தோஷமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மனது மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் கொஞ்சம் சுப செலவுகள் இருக்கும்.
Tags:
Rasi Palan