யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு செல்வபுரம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிவபுரீஸ்வரர் திருக்கோயில் நூதன ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
20ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று 22ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00மணி முதல் மாலை 4.00 மணிவரை எண்ணெய் காப்பு சாத்தல் இடம்பெறவுள்ளது.
மறுநாள் வியாழக்கிழமை(23.10.2025) விசாக நட்க்ஷத்திரமும், துதியை திதியும் சித்தயோகமும் கூடிய அதிகாலை 5.05 மணிமுதல் 5.43 மணிவரையுள்ள கன்னி லக்ன சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ சிவபுரீஸ்வரநாதப்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
.jpg)
