இன்றைய ராசிபலன் - 01.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பதவி உங்களை தேடி வரும். பொறுப்புகள் கூடும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். மனது முழுவதும் சந்தோஷம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் மேலும் நன்மைகளை அடைவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடன் சுமை நீங்கும். இன்றைய நாளில் நீங்கள் கையில் எடுத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். நன்மை நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகளை சரி செய்வீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணங்களின் போது கவனம் தேவை. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக செயல்படுவீர்கள். பிரச்சனைகள் பல வந்தாலும் நிதானத்திலிருந்து உங்களுடைய மனது தடுமாறாது. பக்குவம் வெளிப்படும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிரிகள் தொல்லை விலகும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மாமியார் மருமகள் சண்டை சரியாகிவிடும். நீண்ட நாள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். சின்ன ஏமாற்றம் வந்தாலும் மனது தாங்கிக் கொள்ளாது. கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு இந்த நாள் வேலையை துவங்கலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். எதிரிகள் முன்பு திறமையாக செயல்படுவீர்கள். இன்று உங்களை ஜெயிப்பதற்கு யாராலும் முடியாது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவதற்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடவுள் இன்று நிறைய சோதனைகளை கொடுக்கப் போகின்றான். நிறைய பிரச்சனைகளை கொடுக்க போகின்றான். ஆனால் இந்த நாள் இறுதியில் நீங்கள் தான் ஹீரோவாக இருப்பீர்கள். இன்று வரும் பிரச்சனைகளை கண்டோ அல்லது தடைகளை கண்டோ, தடங்கல்களைக் கண்டோ ஒருபோதும் பயப்படக்கூடாது. விடாமுயற்சி வெற்றியை தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாது. உடல் சோர்வு, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நடுநிலை தவறாமல் நியாயத்தோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வை கொடுப்பீர்கள். உங்கள் கை ஓங்கி நிற்கும். நீங்களும் பெரிய மனிதர்கள் பட்டியலில் வரப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகமான நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சை வீட்டில் மீண்டும் தொடங்கலாம். சுப செலவுகள் ஏற்படும். நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம் தேவை. முதலீட்டின் போது கவனமாக இருங்க. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையில் நீங்கள் முதல் இடத்தை பிடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தை மட்டும் விளக்கி வைத்தால் போதும் நல்லது நடக்கும். வெற்றி உங்களிடம் நிரந்தரமாக இருக்கும்.
Previous Post Next Post


Put your ad code here