இன்றைய ராசிபலன் - 03.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. முக்கியமான மீட்டிங், முக்கியமான ஒப்பந்தம் ஏதாவது போடுவதாக இருந்தால் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திறமை வெளிப்படும் நாள். சின்ன சின்ன வீட்டு பிரச்சினைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டுக்கள் வந்து குவியும் நாளாக இருக்கும். பெரிய அளவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். சோதனையை கொடுக்கும், ஆண்டவன், என்றைக்குமே உங்களை கைவிட மாட்டான். ஆகவே மன பயம் தேவையில்லை. விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கான விஸ்வரூப வெற்றியை தேடி தரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இருக்காது. பிரச்சனைகள் கொடுத்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய நாள். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கக்கூடிய நாளாக அமையும். தேவையற்ற பிரச்சனைகள் வரும். புது முடிவுகளை எடுக்கும்போது தடுமாற்றம் இருக்கும். கவனமாக இருந்துக்கோங்க. கூடுமானவரை இன்று அன்றாட வேலைகளை செய்தால் போதும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாடு செய்வது நல்லது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு அளவில் வெற்றியை அடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாள். மனதிற்கு பிடித்தபடி உங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த, நலமான நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய நண்பர்கள், உறவினர்களின் வருகையால் கொஞ்சம் சுப செலவும் ஏற்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன் கோபம் வேண்டாம். நிதானத்தோடு நடந்து கொண்டால் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வரும். எதிரிகளை நண்பராக்கக்கூடிய வித்தையை கற்று வைத்துக் கொள்ளுங்கள். தந்திரமாக செயல்பட்டால் மட்டுமே இன்று சகல விதமான நன்மைகளும் நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமையும். அது சுற்றுலாவாக இருக்கலாம். ஆன்மீக பயணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வெற்றிகரமாக அமையும். மற்றபடி வேலை வியாபாரத்தில் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். நல்லதே நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை விலகும். நீண்ட தூர பயணங்களில் மூலம் நன்மை உண்டாக்கும். இறைவனின் பரிபூரண அருளால் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here