இன்றைய ராசிபலன் - 04.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் இருந்து வந்த தடைகள் தடங்கல்கள் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி மோதல் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் போட்டி போடக்கூடாது. பொறாமைப்படக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கணும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத பொருளை எக்காரணத்தைக் கொண்டும் வாங்காதீங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் நேரத்திற்கு வேலை என்று உங்கள் நாள் இனிமையாக செல்லும். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். காதல் வெளிப்படும். காதல் கை கூடி, திருமணம் வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தைரியமாக இருப்பீர்கள். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விடலாம் என்ற உங்கள் கனவு நினைவாக, நிறைய நல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முயற்சிகளில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். கவலைப்படாதீங்க. இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வாழ்க்கையில் நிறைய சாதிக்கப் போகிறீர்கள். தீராத பல நாள் ஆசைகளை இன்று நிறைவேற்றிக் கொள்ளலாம். நீண்ட நாள், செய்யவே முடியாது என்று கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை, இன்று கையில் எடுத்துப் பாருங்கள். அந்த வேலை சுறுசுறுப்பாக முடியும் இறையருளால் நல்லதே நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வமாக இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இளைஞர்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் படு சுறுசுறுப்பாக வெற்றியடையும். நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும் நிதிநிலைமை சீராகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பரிசுகள் உங்கள் கையை வந்து சேரும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவி பிரச்சனை சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பணவரவு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற எதிரிகளால் தொல்லை வரும்‌. தேவையற்ற பகை உண்டாகும். ஆகவே யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. முன்கோபடக்கூடாது, தவறு உங்கள் மீது இருந்தாலும், எதிராளி மீது இருந்தாலும், விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும். இன்று விட்டுக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கை கெட்டுப் போக வாய்ப்பு இல்லை.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற சிந்தனைகள் இருக்கும். இதனாலேயே நேரம் வீணாக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற சிந்தனையிலிருந்து விடுபட இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். மனதிற்கு பிடித்த உணவினை சாப்பிடுங்கள். நன்றாக ஓய்வு எடுத்து விட்டு மனதை ஒருநிலைப்படுத்தி விட்டு பின்பு வேலையில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் அவசரப்பட மாட்டீங்க. யாராவது உங்களிடம் வந்து பிரச்சனையை செய்தால் கூட, நீங்கள் ஒதுங்கி செல்வீர்கள். மன அமைதியை தேடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாரையும் நல்லவர் என்று நம்பி உங்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பெருசாக எந்த டென்ஷனும் இருக்காது. மனதிற்கு பிடித்தபடி நேரத்தை செலவு செய்வீர்கள். நிதிநிலைமை சீராகும். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். முன்கோபடக்கூடாது.
Previous Post Next Post


Put your ad code here