யாழில் 04 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனாவார்.

சிறுவன், நேற்று திங்கட்கிழமை (10) காலை வீட்டில் தந்தையுடன் இருந்துள்ளார். தந்தை உறக்கத்தால் கண் விழித்து சிறுவனை காணாது தேடிய போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சிறுவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை மேற்கொண்டார்.

நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here