இன்றைய ராசிபலன் - 06.11.2025..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடைய வேலையில் முழு ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை இருக்கும். நிதானம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அவசரப்பட மாட்டீங்க. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய நிதானம் நிறைய நல்ல விஷயங்களை உங்களுக்கு வாழ்க்கை பாடமாக கற்றுக் கொடுக்கும். கணவன் மனைவி பிரச்சினை தீரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக வெளிப்படும். மிகவும் சிக்கலான காரியங்களை கூட சுலபமாக நடத்தி முடிப்பீர்கள். அடுத்தவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் நடக்காத ஒரு நல்லது இன்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த நல்லது உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச் செல்ல உதவி செய்யும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். தேவையில்லாத விஷயங்களை சிந்திக்காதீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சின்ன சின்ன தலைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. முன்கோபம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எதிலும் கவனக்குறைவாக இருக்காதீங்க. தெரியாத விஷயங்களில் கால் வைக்காதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று பெயர் புகழ் பாராட்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். யாரிடத்தில் எல்லாம் கெட்ட பெயர் வாங்கினீர்களோ, அவர்களிடத்தில் நல்ல பெயரை சுலபமாக சம்பாதித்து விடுவீர்கள். வீண் பழிகள் விலகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அப்படியே ஏதாவது எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு தோல்வி அடைந்தாலும், துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி தான் இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். யாரையும் நம்பக்கூடாது. உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. தேவையில்லாத அலட்சியம் பெரிய அளவில் பிரச்சனைகளை கொண்டு வந்து விடும், ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு வேலையை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எடுப்பீர்கள். நல்ல தூக்கம் இருக்கும். ஓய்வு கிடைக்கும். சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க போறீங்க. தலைகனம் வரக்கூடாது. தன்னடக்கம் இருந்தால் இந்த நாள், இனிய நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு இருந்தா நல்ல செய்திகள் வரும். பண பிரச்சனை தீரும் கடன் சுமை குறையும்.

கும்பம்


கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வந்தாலும், அதை கடந்து செல்லும் பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும். பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு இன்று சந்தோஷம் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாள். உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. தேவையில்லாத அனாவசிய பேச்சுகளை குறைத்தால் மேலும் நன்மைகளை அடையலாம்.
Previous Post Next Post


Put your ad code here