செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் டிசம்பர் 07 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..!!!


வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

இப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மேலும் ருச்சக ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கேட்டை நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். இந்த நட்சத்திரத்தில் டிசம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். இந்த கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன்.

செவ்வாய் புதனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் மன உறுதி வலுபெற்று, தலைமைத்துவ திறன்கள் மேம்படும். இப்போது செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 07 வரை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நிறைய லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். வேலையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்துவீர்கள். தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். அரசிடம் இருந்து நல்ல நன்மைகளைப் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மீனம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 07 வரை அதிர்ஷ்டமாக இருக்கும். ஏனெனில் செவ்வாய் அதிர்ஷ்ட வீடான 9 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் ருச்சக, மங்கள ஆதித்ய மற்றும் திரிகிரக போன்ற ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
Previous Post Next Post


Put your ad code here