ஊர்காவற்றுறையில் சகோதரனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊர்காவற்றுறை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் மாதம் 7 ஆம் திகதி சகோதரர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த நிலையில் மனமுடைந்த சகோதரர் மூன்றாம் நாள் 10 ஆம் திகதி மதுபோதையில் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
மீட்கப்பட்டவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை ஊர்காவற்துறை பொலிஸார் நெறிப்படுத்தியிருந்தனர்.