இன்றைய ராசிபலன் - 07.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கேட்காமலேயே பாராட்டுகள் கிடைக்கும். மனது சந்தோஷமாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்றாட வேலையில் கவனமாக இருக்க வேண்டும். அவசரம் இருக்கக் கூடாது. பொறுமை தேவை. அடுத்தவர்களோடு வாக்குவாதம் செய்யாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். சிவசிவ நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் சண்டை சச்சரவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்குது. உங்களுடைய பெருமைகளை முன்னேற்றத்தை வெளியில் சொல்லாதீங்க. எல்லா விஷயத்திலும் அடக்கத்தோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிறைவான நாள். நிதிநிலை சீராகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்க இருக்கு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டசாலிகளாக வலம் வரப்போகிறீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், வேலையில் முன்னேற்றம், வியாபாரத்தில் கைநிறைய லாபம் என்று சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். முடிந்தால் இன்று இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் உங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும். இன்று அயராது உழைப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். சோம்பேறித்தனம் விலகும். இழந்த பொருட்களை இழந்த மரியாதையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். நல்ல நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உறவுகள் புதுசாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அதிகமாக ஆசைப்படக்கூடாது. பேராசை பெரு நஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு செயல்படுங்கள். கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில் ஈடுபடும் போது கவனம் தேவை. யாரிடமாவது ஏமாற வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்ல பெயர் வாங்கக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே இருந்த கெட்ட பெயர் நீங்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். இறைவனின் அருளால் நல்லதே நடக்கும் நாள் இன்று.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கு. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. வரும் வாய்ப்பை எக்காரணத்தைக் கொண்டும் தட்டி கழிக்காதீர்கள். என்னால் முடியாது, இது நடக்காது என்ற வார்த்தையை இன்று பயன்படுத்தாதீர்கள். பாசிட்டிவா பேசுங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மனதிற்கு திருப்தி தரக்கூடிய விஷயங்களை நீங்களே தானாக தேடி தேடி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வந்தாலும், பெருசாக பிரச்சனைகள் இருக்காது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்தால் மேலும் வாழ்வில் முன்னேறலாம்.
Previous Post Next Post


Put your ad code here