மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தடைப்பட்டு வந்த திருமணம் மீண்டும் நடக்க பேச்சு வார்த்தைகளை வீட்டில் துவங்கலாம். எல்லாம் இனிதே நடந்து முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எதிர்பார்க்காத ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் இருக்கக் கூடாது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிகம் பேசாதீங்க. தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் பிரிந்து கஷ்டப்படுறவங்க முயற்சி செய்து பாருங்க, ஒன்றிணைய ஒரு வாய்ப்பு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவன குறைவு வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப காரியத்தடைகள் விலகும். கடன் சுமை நீங்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இதுநாள் வரை இருந்து வந்த இடர்பாட்டில் இருந்து எல்லாம் விடுபடுவீர்கள். சந்தோஷம் பிறக்கும் வருமானம் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டு மழை தான். எதிர்பார்க்காத நன்மை நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இன்று நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாடு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். நீங்கள் தொட்ட காரியம் பல மடங்கு விருத்தி அடைய வாய்ப்புகள் உள்ளது. புதுசாக வங்கி கணக்கு துவங்குவது, புதுசாக சீட்டு போடுவது, பொன் பொருள் வாங்குவது, இது போல வேலைகளை இன்றைக்கு செய்து பாருங்கள். எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். வேகத்தை விட விவேகம் அதிகமாக வெளிப்படும். செய்த தவறை எண்ணி வருத்தப்படக் கூடிய நாள். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போக மாட்டீங்க. தலைகணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan