சற்றுமுன்னர், கொழும்பு கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30 வயதான இளைஞர் உயிரிழப்பு.
காரில் வந்த சிலர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
காயமடைந்த குறித்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தகவல்கள தெரிவித்தன.
2 பொலிஸ் குழுக்கள் ஊடாக சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
