மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்க வாய்ப்பு உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கைநிறைய லாபம் கிடைக்கும். இழந்த மன நிம்மதியை மீண்டும் அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற வேலையில் கால் வைக்காதீர்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று கட்டுப்பாடு தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு இன்று நேரத்தை செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் பெயர் காப்பாற்றப்படும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கான மரியாதை கூடும். அந்தஸ்து கூடும். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கும். அதை சரி செய்ய கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீரர்கள். விருந்தாளிகளின் வருகையால் மனது மகிழ்ச்சி அடையும். தேவையற்ற பேச்சுக்களை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், வயதானவர்கள் அலைச்சல் இல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்தீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஒரு மன பயம், தேவையற்ற பதட்டம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எதிரிகளிடமிருந்து இருந்து விலகி இருக்க வேண்டும். அனாவசிய வாக்குவாதம் கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் பதட்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். ஏதோ ஒரு மன பயம் ஆழ்மனதில் இருக்கும். புது நபர்களை முழுசாக நம்பாதீங்க. குடும்ப விஷயங்களை எல்லோரிடமும் வெளிப்படையாக பேசாதீங்க. கொஞ்சம் ஒளிவு மறைவோடு நடந்து கொண்டால் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புது முடிவுகளை நாளை தள்ளி வையுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. இளைஞர்கள் அடம்பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கக்கூடாது. இன்று எந்த ஒரு ஆடம்பர பொருட்களையும் வாங்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அடக்கம் வெளிப்படும். பணிவோடு நடந்து கொள்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய இந்த தன் அடக்கம், உங்களை வாழ்க்கையில் மேலே உயர்த்தி விட உதவியதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறைவாக பேச வேண்டும். தற்புகழ்ச்சி பேசவே பேசாதீங்க. உங்களுக்கு நடக்கப் போகும் நல்லதை, முன்கூட்டியே வெளியாக்களிடம் சொல்லாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஓய்வு தேவை என்று உடம்பு சொல்லும். ஆனால் வேலை உங்களை ஓட வைக்கும். கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
Tags:
Rasi Palan