கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய குழு ; சிக்க வைத்த இரகசிய தகவல்..!!!


இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (08) கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து கொடகம, மிட்டியாகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஆறு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து எழுபத்தைந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோகிராம் 420 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ. 10,811,500.00 பணம் மீட்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினால் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 06ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெனியாய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மாத்தறை கொட்டபல பிரதேசத்தில் 662 மில்லியன் ரூபாய்க்கும் மேலதிக பொறுமதியுடைய 110 கிலோகிராம் 450 கிராம் வல்லப்பட்டையுடன், தெனியாய பிரதேசத்தில் வசிக்கும் மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Previous Post Next Post


Put your ad code here