ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் குரு பகவானும், சூரியனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகமானது மிகவும் மங்களகரமானது. இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த சுப ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலனைப் பெறக்கூடும். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மதியாதையும் அதிகரிக்கும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் ஆளுமை மேம்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். இதனால் பல முக்கியமான முடிவுகளையும் சிறப்பாக எடுப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பெற்றொருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
Tags:
Rasi Palan
