இன்றைய ராசிபலன் - 12.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும் நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. கொடுக்கல் வாங்கலில் மூன்றாவது நபரை முழுமையாக நம்ப வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். சுப செலவுகள் ஏற்படும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை சீர் செய்ய கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவனத்தோடு செயல்பட வேண்டும். அகலக்கால் வைக்காதீங்க. அன்றாட வேளையில் முழு கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். நேரம் தவறாமல் உங்களது கடமைகளை செய்து முடிப்பீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலைமை சீராகும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதியான நாளாக இருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். குழப்பங்கள் நீங்கும் நாள். கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு நல்ல அனுபவங்களை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன தோல்விகளை கண்டு நீங்கள் பயப்படக்கூடாது. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியும் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். மற்றபடி இந்த நாள் இனிய நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். சுற்றி இருப்பவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் நாள். நிதி நிலைமை மேலோங்கும் கடன் சுமை குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். திறமையாக வேலை செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும். எதிரிகளை ஜெயிக்க கூடிய நாளாக அமையும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தைரியமாக இருப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். எதிரிகளை தோற்கடிக்கும் நாள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விளம்பரப்படுத்தி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும். தக்க சமயத்தில் தக்க உதவி கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அகல கால் வைக்காதீங்க. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைக்காதீங்க. உங்களுக்கு தெரிந்ததை மட்டும் செய்யுங்கள்.
Previous Post Next Post


Put your ad code here