மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் இருக்காது. சுறுசுறுப்பு இருக்காது, இருந்தபோதிலும் அன்றாட வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அனாவசியமான வேலைகளை செய்வதை மட்டும் தவிர்த்து விடுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனம் இருக்கும். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும் மனநிம்மதி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் இருக்கக் கூடாது. உறவுகள் நண்பர்களோடு பேசும் போதும் கவனம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு சேர்ந்த தந்திரம் ஜெயிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். நாளையை பற்றிய சிந்தனையை விட்டு விடுங்கள். இன்றைக்கான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. உறவுகளோடு பேசும்போது நிதானம் இருக்கட்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடிய நாளாக இருக்கும். தவிர்க்க முடியாத சில காரணத்தால் சில சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். இதனால் சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். கவலை வேண்டாம் நிதானமாக இருங்க. நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கஷ்டங்கள் கடந்து போகும் நாளாக இருக்கும். இதுவும் கடந்து போகும் என்ற உங்களுடைய மனநிலை வாழ்க்கையை பக்குவப்படுத்தும். நிறைய நல்ல அனுபவத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். எதிரி தொல்லை விலகும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள், பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் மட்டும் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். யாரிடமாவது ஏமாற வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக சேமிப்பை துவங்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளுக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்லது நடக்கும் நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மனம் தடுமாறாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதில் நிலையாக நிற்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதீங்க. தெரியாத வேலையில் தலையிடாதீங்க. பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். இளைஞர்கள் இன்ற கட்டாயம் அவசரப்படக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை அடக்க வேண்டும். இறைவழிபாடு செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மந்தமான நாளாக இருக்கும். கொஞ்சம் சோம்பேறித்தனம் வெளிப்படும். இன்றைய வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிந்திப்பீர்கள். ஆனால் அது தவறு. இன்றைக்கான வேலையை இன்றே முடித்து விடுங்கள். அப்போதுதான் இந்த வார விடுமுறை நாட்கள் சிறப்பாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். இன்று மேற்கொள்ளக் கூடிய பயணங்கள் நல்லபடியாக நடக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பேசுவதை குறைத்தால் பாதி பிரச்சனை தீரும் என்பதை மனதில் வைத்தாலே போதும், நல்லது உங்கள் பின்னால் வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படும் நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். காயப்பட்ட மனது ஆறுதல் பெறும். சந்தோஷம் பிறக்கும் நாள் இன்று.
Tags:
Rasi Palan