மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய சொந்த விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீங்க. தேவையில்லாத கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. ஒளிவு மறைவோடு இருந்தால் மட்டுமே இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு, தேவையில்லாத நபரோடு சேர்ந்து ஊர் சுற்ற வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் உஷாராக இருந்தால் மட்டும் போதும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. அடுத்தவர்களுடைய பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு ஜாமின் கையெழுத்து போடாதீங்க. மூன்றாவது நபரை நம்பி நீங்க எதுவும் வாக்கு கொடுக்காதீங்க. தேவையில்லாத சிக்கல்களில் சிக்க சின்ன வாய்ப்பு இருக்கு. உஷாராக இருக்க வேண்டிய நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். சுறுசுறுப்பு இருக்கும். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் எல்லாம் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு இன்று உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மனது நிரம்ப சந்தோஷம் இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். ஏதாவது ஒரு வகையில் ஒரு பரிசு பொருள் உங்கள் கைக்கு வந்துவிடும். செல்வாக்கு உயரும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் இருக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உங்களுடைய அன்றாட வேலைகள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற சிந்தனையிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். எதைப்பற்றியும் யோசிக்காமல் வேலையில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த நாள் இனிய நாளாக அமையும். அடுத்தவர்கள் பேச்சை செவி கொடுத்து கேட்காதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் டென்ஷன் தொல்லை நிறைந்த நாளாக தான் இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள போகின்றோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயந்து துவண்டு போகக்கூடாது. இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். இறை நம்பிக்கை வையுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் என்று நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உற்சாகம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் இயலாதவர்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற சங்கடங்கள் உங்கள் மனதை குழப்பும் கவலைப்படாதீங்க. இறைவழிபாடு செய்யுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களிடம் உங்களுடைய டென்ஷனை கொட்டாதீங்க. அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைத்து விடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் சரியாக நடந்து முடியும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த வேலைகளுக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள். பெரிய தலைவலி உங்களை விட்டு விலகும். நல்லது நடக்கும் நாள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.
Tags:
Rasi Palan