இன்றைய ராசிபலன் - 21.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வாராக்கடன் வசூல் ஆகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்க கூடிய யோகமும் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிரச்சினை கொடுத்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். முதலீட்டின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் எடுத்து போடாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம். உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமாக செயல்படுவீர்கள். யாரையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். சந்தோஷம் பிறக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையில்லாத மனக்குழப்பம் நீங்கும். உங்களுடைய விடை தெரியா கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் வெளிப்படும் திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும் இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எல்லா விஷயத்திலும் நீங்கள் பட்டும் படாமல் இருப்பீர்கள். உங்களுடைய நிலை தடுமாறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். மற்றபடி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பெயர் புகழ் பாராட்டு உங்களை தேடி வரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம். புதுசாக பாட்னரை சேர்த்துக் கொள்ளலாம் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகளை மீண்டும் துவங்கலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்வீர்கள். துவண்டு போகக்கூடாது. வரக்கூடிய பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவம் தேவை. இறைவழிபாடு செய்ய வேண்டும். விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். புது முடிவுகள் எடுப்பதை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. யாரிடமும் பொய் சொல்லக்கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத விஷயங்களை இன்று கையில் எடுங்கள். வேலைகள் பட்டென்று முடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. நல்ல ஓய்வு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இன்று உங்களை நல்வழிப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பணிவான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பேச்சை குறைத்துக் கொள்வீர்கள். நல்ல ஓய்வு எடுப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும் தேவையற்ற பிரச்சனைகள் தானாக விலகும். ஆரோக்கியம் மேம்படும்.
Previous Post Next Post


Put your ad code here