யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த குறித்த நபர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ளார்.
கை கழுவுவதற்காகக் கிணற்றுக்கு அருகில் சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.
பின்னர் கிணற்றில் இருந்து அவர் உடலமாக மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.