இன்றைய ராசிபலன் - 23.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய கடமைகளை சரியாக முடிப்பீர்கள். எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இன்றைய நாள் உங்கள் ஓட்டம் வேகமாக இருக்கும். மனதிற்கு நிறைவான நாளாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தன்னடக்கம் அதிகமாக வெளிப்படும். எவ்வளவு பெயர் புகழ் அந்தஸ்து வந்தாலும் உங்களுடைய பணிவு ஒருபோதும் மாறாது. அந்த தன்னடக்கம் உங்களுக்கு இன்னும் பெரிய வாய்ப்புகளை தேடித் தரப் போகிறது. இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை வெளிப்படும். உறவுகளோடு இருந்து இன்று நேரத்தை செலவு செய்வீர்கள். கூடவே கொஞ்சம் பணமும் செலவாக வாய்ப்பு உள்ளது. இந்த நாள் நிம்மதியான நாள். நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு என்று என்ஜாய் பண்ணுவீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அனாவசிய செலவாக இருக்காது. அத்தியாவசிய செலவாகவே இருந்தாலும் கொஞ்சம் மன வருத்தம் உண்டாகும். கவலைப்படாதீங்க, இன்னைக்கு நீங்க நினைத்தால் நல்லது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்ல காரியங்கள் கைகூடி வரும் நாள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வெற்றி காணும் நாள் இன்று.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு என்று இந்த விடுமுறை நாளை என்ஜாய் பண்ணுவீங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆபரண சேர்க்கை இருக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் மனபாரம் குறையும்‌. இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். அவமானத்திலிருந்து விடுபடுவீர்கள். எந்த இடத்தில் எல்லாம் தலைகுனிந்து நின்றீர்களோ, அதே இடத்தில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகளை கடவுள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக பேசுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் முன்கோபம் அதிகமாக வரும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். எதிலும் விட்டுக் கொடுத்து நடங்க. அடம் பிடிக்காதீங்க. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வேலை வியாபாரம் எதிலும் அவசரம் வேண்டாம் ‌

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய யோசனை இருக்கும். ஏதோ ஒரு வகையில் சிந்தனை உங்களை குழப்பிவிடும். எது நல்லது எது கெட்டது என்று புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். புது முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பிடித்த நபருட்ன பத்து நிமிடம் பேசுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். பிரச்சனை செய்து வந்தவர்களோடு சரண்டர் ஆகி விடுவீர்கள். எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். சஞ்சலங்கள் நீங்கும் நாள். இறையருள் கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடையும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Previous Post Next Post


Put your ad code here