
கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கனவே இருவர் உடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இருவரும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு மாவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.