இன்றைய ராசிபலன் - 25.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்க்கை இருக்கப்போகிறது. சுகமான ஒரு அனுபவம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புடன் இருப்பீர்கள். வாழ்த்துக்கள், இந்த நாளை சந்தோஷமாக வரவேற்று கொண்டாடுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனது ஏதோ ஒரு தடுமாற்றத்தோடு இருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் செலுத்துங்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கவும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லதே நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். பெருசாக எந்த ஒரு பரப்பரப்பும் இருக்காது. உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். மழைக்காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். பிடித்த நபருடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுங்கள். இந்த நாள் இன்னும் இனிய நாளாக அமையும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பாசம் வெளிப்படும் நாள். காதல் வெளிப்படும் நாள். காதல் கைகூடி திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமைய நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இருக்கும் வேலையை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. வேலை வியாபாரத்தில் கவனம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையை முன்னேற்றி கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்ற அடையும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும் கடன் சுமை குறையும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பகை சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும். உற்சாகமாக இருப்பீர்கள். திறமைகள் வெளிப்படும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். பாஸ்போர்ட் விசா விவகாரங்களை இன்று துவங்கலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஏமாறாதீங்க. சரியான ஒப்பந்தங்கள் இல்லாமல், எந்த பரிவர்த்தனையும் நடக்கக்கூடாது கவனம் தேவை. புது மனிதர்களிடம் பழகும் போது, பேசும்போது வார்த்தையிலும் கவனம் இருக்க வேண்டும் ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன சிக்கல்கள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் தக்க சமயத்தில் உறவுகள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பல கஷ்டங்களுக்குப் பிறகு ஒரு பெரிய வெற்றி உங்களை தேடி வர போகிறது. என்ஜாய் பண்ணுங்க. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். தெளிவாக சிந்திப்பீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். பல குழப்பமான பிரச்சனைகளை கூட நிமிடத்தில் சுலபமாக தீர்த்து வைக்கும் திறமை இன்று உங்களிடம் வெளிப்படும். அடுத்தவர்களை ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக தான் இருக்கும். கவலைப்படாதீங்க, இன்று உங்களை புரிந்து கொள்ளாத மனிதர்கள், நிச்சயம் நாளை புரிந்து கொள்வார்கள். ஆகவே எல்லா இடத்திலும் தன்னடக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமை நிறைந்த நாளாக தான் இருக்கும். அடுத்தவர்களைப் பார்த்து நீங்கள் எந்த பேராசையும் படக்கூடாது. உங்களுக்கு நடக்கும் நல்லதையும் வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. நிதானமாக நடக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
Previous Post Next Post


Put your ad code here