இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), இந்த ஆண்டு இதுவரை 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோரைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், 18,000 புதிய நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்ட, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18% அதிகமாக வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திணைக்களம் கடந்த வாரம் 2 ட்ரில்லியன் ரூபாயைத் தாண்டி, வரலாற்றிலேயே அதிகபட்ச வருவாய் வசூலை எட்டியுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பெர்னாண்டோ, “இதுவரை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரூபா 2,080 பில்லியனை வசூலித்துள்ளது,” என்று கூறினார்.
Tags:
sri lanka news
