கிளிநொச்சியில் கொடூரம் - மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் பலி..!!!



கிளிநொச்சி அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் மகளுடன் சண்டையிட்ட போது மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்த நிலையில் மகளை தாக்க முற்பட்ட. மருமகனை தடுக்க முற்பட்டவேளை மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 59வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். 25வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக அக்கராயன் குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here