நவம்பர் இறுதியில் நடக்கும் சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுது...


வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர்.

இந்த சனி பகவான் தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் ஜூன் 13 முதல் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக வக்ர நிலையில் இருந்த சனியால் இதுவரை வாழ்க்கையில் சிரமங்களை சந்தித்து வந்தால், அது நவம்பர் 28 முதல் முடிவுக்கு வரும். மொத்தத்தில் சனி பகவானின் பரிபூர்ண ஆசியால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் குறைந்து, பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை சண்டைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வந்து, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். பேச்சு இனிமையாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். முக்கியமாக நவம்பர் 28 ஆம் தேதி முதல் பல வழிகளில் இருந்து பணம் தேடி வருவதைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் வேகம் பெறும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நவம்பர் 28 முதல் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பழைய கடன்கள் தீரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் நவம்பர் 28-க்கு பின் பொற்காலமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் நவம்பர் 28 முதல் சனி பகவான் உங்கள் வாழ்க்கையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த சண்டைகள் நீங்கும். தாமதமான வேலைகள் வேகமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். நிதி நிலை வலுவடையும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். வக்ர காலத்தில் அஷ்டம சனியால் சந்திக்கும் பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் நவம்பர் 28 முதல் அந்த நிலைமை மாறும். வேலை தொடர்பான பயணங்கள் வெற்றியைத் தரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். செல்வம் குவியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் எழும். கடந்த 4 மாதங்களால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மொத்தத்தில் சனியின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Previous Post Next Post


Put your ad code here