வவுனியாவில் தீ பரவல்..!!!


வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.

காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here