நாம் தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. அதுவும் இம்மாதத்தின் தொடக்கத்தில் தேவர்களின் குருவான குரு பகவான் டிசம்பர் 05 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
மேலும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் டிசம்பர் 07 ஆம் தேதி தனுசு ராசிக்கும், கிரகங்களின் இளவரசனான புதன் விருச்சிகம் மற்றும் தனுசு ராசி என இரண்டு முறையும் ராசியை மாற்றவுள்ளார். அதோடு கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். மேலும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் டிசம்பர் 20 ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கும் செல்லவுள்ளார்.
இப்படி டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
இதன் விளைவாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. அதோடு ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் செவ்வாய் விருச்சிக ராசியிலும், குரு பகவான் 8 ஆவது வீட்டிலும் இருப்பார். இதன் விளைவாக ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலை மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன், நற்பெயரும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் வாழ்வின் அனைத்து பக்கங்களில் இருந்தும் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் இந்த ராசியில் புதாதித்ய, சுக்ராதித்ய, மங்களாதித்ய, திரிகிரக மற்றும் பஞ்சகிரக யோகங்கள் உருவாகவுள்ளன. இதன் விளைவாக நீண்டகால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுவும் வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய விரும்பினால், அந்த கனவு நனவாகலாம். இம்மாதத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலை வலுவடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதனால் நிதி நிலையில் பெருமளவில் உயர்வு ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan
