500 ஆண்டுகளுக்கு பின் சனியும், புதனும் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டமடையும் ராசிகள்..!!!


ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையிலும், வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவும் செய்யும். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதேப் போல் புதனும் வக்ர நிலையில் உள்ளார். இந்நிலையில் நவம்பர் மாத இறுதியில் சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளன. அதில் நவம்பர் 28 ஆம் தேதி சனியும், நவம்பர் 30 ஆம் தேதி புதனும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளனர்.

இந்த கிரகங்களின் நிலை மாற்றங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது மற்றும் நிதி நிலையில் உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனியும், 11 ஆவது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனியும், 10 ஆவது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால், இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனியும், 6 ஆவது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிவர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புக்கள் உள்ளன.
Previous Post Next Post


Put your ad code here