யாழில். டெங்கு பரவும் சூழலை பேணியவர்களுக்கு 80ஆயிரம் தண்டம்..!!!



யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்களுக்கு தலா 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 10 ஆதன உரிமையாளர்களிற்கு எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

மன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, அனைத்து ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த மன்று ஆதன உரிமையாளர்களிற்கு தலா 08 ஆயிரம் ரூபாய் வீதம் 80,000 தண்டப்பணம் விதித்தது.
Previous Post Next Post


Put your ad code here