கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான மழை மேகங்கள் உருவாக தொடங்கியுள்ளன என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கன மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளன..
அதேவேளை இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது.
முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 28.11.2025 வரை மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தமது நடவடிக்கைகளை திட்டமிடுவது சிறப்பானது.