கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ நூல் வெளியீட்டு விழா..!!!


யாழ்ப்பாபணம் வண்ணார்ப்பன்னையைச் சேர்ந்த கவிஞர் சு. நிஷேவிதசர்மா எழுதிய ‘காதோரமுத்தங்கள் ’ எனும் காதல் சார்ந்த கவிதை நூல் 7ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு,(J Hotel, Jaffna) ஜே ஹோட்டலில் வெளியிடப்பட்டது.ஒரு ஆண் பெண் மீது கொண்டுள்ள காதல், அவள் மீதான தீரா அன்பு, காதலியின் ஸ்பரிசம், காதலும் களவும், காதலர்களின் பிரிவு, காதலியின் பிரிவினால் ஏற்படும் காதலனின் பரிதவிப்பு, பிரிவாற்றமை, காதலி மீதான காதலனின் ஏக்க உணர்வு போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதை நூல் அமையப்பெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இ. த. ஜெயசீலன் பிரதேச செயலாளர், பிரதேச சபை பச்சிலைப்பள்ளி, சிறப்பு விருந்தினராக save a life இன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராகுலன் கந்தசாமி ஆகியோர்கள் பங்குப்பற்றி இருந்தார்கள்.

இந்நிகழ்வினை கீர்த்திகா ஜீவரஞ்சன் தொகுத்து வழங்கியதோடு கவிஞர் வசீகரன் ரொபின்சன், பேச்சாளர்களான கேசிகா சாம்பசிவம், யமீனா கிருஷ்ணசாமி, திஷான் சிவகுமார் ஆகியோர்கள் நூல் தொடர்பான கருத்துரைகளையும் வழங்கி இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் புத்தக நேயர்கள், உறவினர்கள், கவி புனைபவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.





















Previous Post Next Post


Put your ad code here