இன்றைய ராசிபலன் - 10.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். ஆக்கபூர்வமாக செயல்படுவீர்கள். தொட்டதெல்லாம் வெற்றி அடையும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற மன பயம், பதட்டம் இருக்கும். அதனால் புது விஷயங்களை துவங்க வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துக்காதீர்கள். நேர் வழியில் நடந்து கொள்ளுங்கள். கோர்ட்டு கேஸ் வழக்குகள் பற்றிய பேச்சினை ஒத்தி வைப்பது நல்லது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். நிறைய வேலை பளுவை இழுத்து தலையில் போட்டுக் கொள்ளக் கூடாது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். நீங்கள் நினைத்ததை விட, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை வசதி வாய்ப்புகளும் உங்கள் கையை வந்து அடையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஒருபோதும் தலைகனம் தலைதூக்கக் கூடாது. அதில் கவனம் கொஞ்சம் இருக்கட்டும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும். குடும்ப ஒற்றுமை மனதிற்கு நிறைவையும், இரவு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். தேவையற்ற சிந்தனைகள் உங்களை விட்டு நீங்கும். மன நிறைவோடு இந்த நாளை கடந்து செல்லலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். அடமானத்தில் இருந்த பொன் பொருளை மீட்டு எடுப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் பெருகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றமும் இருக்கும். கடன் சுமை குறையும் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளால் நிதி நிலைமையும் சீராகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று மனநிறைவோடு இருப்பீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். நண்பர்களாக இருந்தால் கூட அவர்களிடம் சில விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவு பெறும். மனதிற்கு பிடித்த உறவுகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுசாக சொத்துக்கள் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். சேமிப்பை அதிக படுத்தலாம். வியாபாரத்தை விரிவு செய்யலாம். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாள் குடும்ப ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
Previous Post Next Post


Put your ad code here