உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான அறிவித்தல்..!!!


நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தர பரிட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிக்கவிருக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,

"உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பரீட்சை நடக்கும் முழு காலப்பகுதியிலும் உங்களது முகம் திறந்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல் உங்களது காதுகளும் தெரியம்படி இருக்க வேண்டும்.

ஏனெனில், சில பரீட்சார்த்திகள் தற்போதுள்ள தகவல் தொடர்பு சாதனங்களை அணிந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பரீட்சை மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன."

"மேலும் ஒரு விசேட விடயம் உள்ளது... பல்தேர்வு வினாப்பத்திரத்திற்கு விடையளிக்கும் போது, வினாப்பத்திரத்திலேயே விடைகளைக் குறிப்பீர்கள். ஆனால், நாம் வழங்கும் விடைத்தாளில் குறிக்கப்பட்ட விடைகள் மட்டுமே உங்களது விடைத்தாளாக ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் நேரத்தை முகாமைத்துவம் செய்து, சரியான விடைத்தாளில் குறிக்க வேண்டும்." என்றார்.
Previous Post Next Post


Put your ad code here