யாழில். இளம் பெண் உயிரிழப்பு..!!!



யாழில் மூச்செடுக்க சிரமப்பட்டு யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இருபாலை பகுதியை சேர்ந்த யுவதியே (வயது 24)) உயிரிழந்துள்ளார்.

வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தூங்க சென்ற யுவதி , நேற்றைய தினம் அதிகாலை வேளை , தூக்கத்தில் இருந்து எழுந்து , மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அதனை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு வீட்டார் அறிவித்த வேளை , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனை அடுத்து பிறிதொரு வாகனத்தில் யுவதியின் சடலத்தை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் ,உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here