புதன் வக்ர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கும்..!!!




ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் புதன் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.

தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் நவம்பர் 10 ஆம் தேதி விருச்சிக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

அதுவும் புதன் வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது புதன் விருச்சிக ராசியில் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு சுமூகமாக மாறும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரம் குறைந்து, மனம் நிம்மதியாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, பகுத்தறிவு மற்றும் தொடர்பு திறன்கள் மேம்படும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மாறும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளிலிருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய இறக்குமதி-ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் தன்னம்பிக்கை, வெற்றி மற்றும் நிதி நிலைத்தன்மையை அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களில் தடைபட்ட வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பங்குச் சந்தை, மார்கெட்டிங் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இக்காலத்தில் நிதி நிலையில் உயர்வு ஏற்படும் மற்றும் சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

Previous Post Next Post


Put your ad code here