புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் 27(02) இன் கீழ் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாகவும், இதனால் கோபமடைந்த பைசல் எம்.பி. தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கட்டத்தில், இது ஒரு ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் இதன்போது கூறினார். இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி பாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, கொலை மிரட்டல் ஒரு கடுமையான சூழ்நிலை என்று கூறினர், எனவே அதை எழுப்ப அர்ச்சுனாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.
அதன் பின்னர், சபாநாயகர் அர்ச்சுனாவிற்கு வாய்ப்பளித்தார். அதன் பின்னர், அர்ச்சுனா தெரிவித்துள்ளதாவது, புத்தளம் மருத்துவமனை குறித்து தான் கேட்டபோது, பைசல் எம்.பி. கோபமடைந்து புத்தளம் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று தான் சொன்னபோது, மருத்துவமனை சபையை மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
இதன்போது பைசல், தான் அதிகமாக விளையாட வந்தால், தன்னை கொல்லுவதாக கூறினார். புத்தளத்திற்கு வர வேண்டாமென குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த இடத்தின் சி.சி.டி.வி. காட்சிகளையும் பயன்படுத்தலாம் என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு சபாநாயகர் அர்ச்சுனா எம்.பியிடம் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news
