யாழ்ப்பாணம் ஆனைப்பந்திப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் நேற்று(19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் தனித்து வசித்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் முழுவதும் வீடு பூட்டியிருந்ததை அவதானித்த அயலவர்கள் நேற்று மாலை வீட்டினுள் நுழைந்து பார்வையிட்ட போது அவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து நோயாளர் காவு வண்டி, பொலிஸாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்காவு வண்டி மரணத்தை உறுதி செய்து திரும்பியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், கிராமசேவகர் ஆகியோர் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.