ஜப்பான் கடல் உணவுக்கு சீனாவில் தடை..!!!


ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.

சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.

மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள், ஸ்குவிட்கள், ஆக்டோபஸ்கள் போன்றவை அங்கிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.

இந்தநிலையில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here