மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். தடைப்பட்டு வந்திருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. கோர்த்து கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிகமாக எதிர்பார்ப்பு வேண்டாம். தேவையில்லாத எதிர்பார்ப்பு, தேவையற்ற ஏமாற்றத்தை கொடுக்கும். உங்களுடைய கடமைகளை மட்டும் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். இறைவனின் அருளால் நல்லது மட்டுமே நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் இருக்கும். மகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. செலவை குறைக்க வேண்டும். இளைஞர்கள் பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதியான நாளாக இருக்கும். பாசம் வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் இந்த நாள் கூடுதல் நற்பலன்களை பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு உயரும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். இறைவனின் பரிபூரண அருளால் நல்லதே நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் லாபமாக மாறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் நிறைந்த நாளாகத் தான் இருக்கும். வேலை பளுவும் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. கவலைப்பட வேண்டாம். உங்களால் முடிந்த வேலையை செய்துவிட்டு தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனவருத்தம் கொஞ்சம் இருக்கும். எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. நல்லது செய்த இடத்தில் கூட, கெட்ட பெயரை வாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எல்லாம் ஒரு சில நாட்களுக்கு மட்டும்தான். நிச்சயம் உங்களுக்கு உண்டான நல்ல பெயர் உங்களைத் தேடி வரும். கவலைப்படாமல் கடமையை மட்டும் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சொத்து சுகம் யோகமும் உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். பெருசாக பிரச்சனைகள் வந்தாலும், எந்த ஆர்ப்பாட்டமும் செய்ய மாட்டீர்கள். நிதானத்தோடு உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பக்குவம் வெளிப்படும் நாள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகள் கூட உங்களை நண்பர்களாக பார்ப்பார்கள். அவ்வளவு நன்மைகளை இறைவன் உங்களுக்காக இன்னைக்கு கொடுப்பான்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கை துணைக்கு பிடித்தபடி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கடன் சுமை குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நேர்மையாக சிந்திப்பீர்கள். அரசுக்கு புறமான காரியத்தில் ஈடுபட மாட்டீர்கள். சுயமரியாதையும் கௌரவமும் உங்களுக்கு இரண்டு கண்களாக இருக்கும். புதுப்புது எதிரிகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. தேவையில்லாத சிந்தனையை விட்டு விடுங்கள். மன உளைச்சலில் ஒருபோதும் இருக்க கூடாது. மனம் தெளிவானால் இந்த நாள் இனிய நாள்.
Tags:
Rasi Palan