மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று, எதிர்பார்த்ததை விட பல நன்மைகள் தேடி வரும். புதிய வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். நம்பிக்கையோடு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதுவுமே உங்களால் முடியாதது இல்லை. முயற்சி செய்தால் நிச்சயம் சாத்தியமாகும். இறை வழிபாடு செய்வது இன்னும் கொஞ்சம் மன தைரியத்தை ஊக்குவிக்கும்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானம் தேவை. பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அதிகம் பேசக்கூடாது. தேவையில்லாத பஞ்சாயத்துகளுக்கு செல்லக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஓய்வு தேவை. வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் அசதி இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று அதிகம் முன் கோபப்படக்கூடாது. பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது. உறவுகளுக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி கிடைக்கும் நாள். சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாள். எல்லாம் கைவிட்டு சென்று விடுமோ என்ற நிலைமையில் ஒரு நல்ல செய்தி உங்களை வந்து சேரும். கவலைப்படாதீங்க, கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கு. கடவுள் சோதனையை கொடுப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணங்களின் போது உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும் வருமானம் சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய புது விஷயங்களை செய்வீர்கள். ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். திறமை வெளிப்படும் நாள். உற்சாகம் பிறக்கும் நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு குறைவாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்கும். இந்த நாள் வேலையை அடுத்த நாள் தள்ளிப் போட மனசு சொல்லும். ஆனால் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அன்றைக்கான வேலையை அன்றே முடிப்பது தான் சரி. கவனமாய் இருந்துக்கோங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்ட காற்று வீசப் போகிறது. நீங்கள் யோகக்காரர்களாக மாறப் போகிறீர்கள். அதிர்ஷ்டம் கெட்டவன் என்று சொன்னவன் வாயாலயே, உங்களை யோகக்காரன் என்று விதி சொல்ல வைக்கப்போகிறது. ஏதோ ஒரு வகையில் ஒரு அழகான அனுபவம், உங்கள் வாழ்க்கையில் நடக்கும். அது உங்கள் வாழ்க்கையை முன்னேற்றி தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு உங்களுடைய மறதிக்கு அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது., ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் முன்கோபம் வரக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திற்கும் அவசரப்படுவீர்கள். அடுத்தவர்களை திட்டிக் கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சின்ன சின்ன எதிரி தொல்லை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு உயரக்கூடிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். மனநிறைவு இருக்கும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று இரக்க குணத்தோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தெரியாமல் செய்த தவறுக்கு கூட மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்கள். இறை நம்பிக்கை அதிகமாகும் நாள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். மனநிறைவு கிடைக்கும்.
Tags:
Rasi Palan