இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க விருதினை குட்டியப்புலம் அ த க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா பெற்றுக்கொண்டார்.
கல்வியமைச்சு, இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தி ஒத்துழைப்புடன் மாணவர்களின் விஞ்ஞான மற்றும் விவசாய செயற்பாட்டு அறிவை மேம்படுத்தும் முகமாக இளம் விவசாய விஞ்ஞானி [Little agriculturist-2025] போட்டி நிகழ்ச்சி திட்டத்தினை கடந்த 4 வருடமாக தேசியரீதியில் நடத்தி வருகிறது.|
இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற போட்டியில் தங்க விருதினை குட்டியப்புலம் அ த க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா பெற்றுக்கொண்டார்.
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிய பாடசாலையில் கல்விகற்கும் குறித்த மாணவியின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இம்மாணவிக்கான விருது கடந்த 07.12.2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் (BMICHன்) லோட்டஸ் அரங்கில் இடம்பெற்ற இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின் 81 ஆவது வருடாந்த அமர்வில் வழங்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் போராசிரியர் கிரிஷாந்த அபயசேனா அவர்களின் பிரசன்னத்துடன் பேராசிரியர் Udeni P Nawagamuwa [ Civil Engineering] அவர்களால் மாணவிக்கு வழங்கிவைக்கப்பட்டது.
